நடுரோட்டில் இஎம்ஐ கேட்டு மிரட்டியதால் பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்!

 
பைக்
 

 

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், வாகன கடன் வாங்கிவிட்டு இஎம்ஐ செலுத்தாததால், இஎம்ஐ கட்டாவிட்டால் பைக்கை எடுத்து சென்று விடுவோம் என்று நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து  இளைஞரைத் தொல்லைச் செய்து வந்ததில் நிதி நிறுவன ஊழியர்களின் கண்முன்னே திடீரென அந்த இளைஞர் தனது பைக்கிற்கு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் தங்கியுள்ள இளைஞர் ஒருவர் இஎம்ஐ மூலம் பைக் வாங்கினார். மாதந்தோறும் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த மாதம் சில காரணங்களால் அவரால் தனது இஎம்ஐ தவணையை செலுத்த முடியவில்லை. 

இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இருந்து போன் மூலம் தொடர்ந்து பணத்தை கட்டுமாறு கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் பணம் செலுத்த சிறிது நாள் அவகாசம் தருமாறு கேட்டார். ஆனால் நிதி நிறுவனத்தின் முகவர்கள் அதை ஏற்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி தொல்லைக் கொடுத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள், உடனடியாக இஎம்ஐ தொகையை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் பைக்கை எடுத்து சென்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீண்ட நேரம் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நிதி நிறுவன முகவர்கள் கண்ணெதிரே தனது பைக்கிற்கு தீ வைத்துள்ளார். இதில் பைக் முற்றிலும் எரிந்து கருகியது.

பைக்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் நிதி நிறுவனத்தின் முகவர்கள் அளித்த புகார்களின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web