நடுரோட்டில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடையில் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை சித்திக் ராஜா என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் காதலுக்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த வாலிபர் ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் இளம்பெண்ணிற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் உடனே அங்கிருந்து தப்பி ஓடினார். காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சித்திக் ராஜாவுக்கு கைமுறிவு ஏற்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!