தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்! கெத்து காட்டும் நடிகர் விஜய்!

 
தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்! கெத்து காட்டும் நடிகர் விஜய்!

தமிழ் திரையுலகில் மக்களின் இதயம் கவர்ந்தவர் இளைய தளபதி நடிகர் விஜய். இவர் 2012 ல் இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.இறக்குமதி வரி செலுத்தியிருப்பதால் நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்! கெத்து காட்டும் நடிகர் விஜய்!

இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்தது. அத்துடன் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவை எதிர்த்தும், அவரின் விமர்சனங்களை நீக்க கோரியும் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 7ம் தேதி நிலுவை வரித்தொகை 32.3 லட்சம் செலுத்தப்பட்டு விட்டது. ஆனால் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் இது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்! கெத்து காட்டும் நடிகர் விஜய்!

கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என விஜய் தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web