நாடு முழுவதும் அதிர்ச்சி... சிகிச்சைக்கு வந்த இளம்பெண் பலத்காரம்... மயக்க ஊசி போட்டு டாக்டர் வெறித்தனம்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட பேரதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், நாடு முழுவதும் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி, பலாத்காரம் செய்த டாக்டர், ஆபாசமாக அந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். சுமார் ரூ.4 லட்சம் பணமும் பறித்த டாக்டர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தனது கணவர் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, டாக்டர் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் இளம்பெண்ணை தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோவும் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த எழுந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த போது, தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோக்களைக் காட்டி, இது குறித்து வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். அதன் பின்னர் இப்படி மிரட்டல் விடுத்து அடுத்தடுத்து அந்த இளம்பெண்ணை மருத்துவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டி அவரிடம் இருந்து சுமார் ரூ.4,00,000 பணமும் பறித்துள்ளார். கணவன் வெளியூரில் இருக்கும் நிலையில் செய்வதறியாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்த இளம்பெண், கணவர் ஊர் திரும்பியதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கணவன் மீது நம்பிக்கை வைத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், தொடர்ந்து தான் மருத்துவரால் மிரட்டப்பட்டு வருவது குறித்தும் கதறியழுதபடி கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவரை கைது செய்யக்கோரி நடந்த சம்பவங்களை இருவரும் காவல்நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மருத்துவரை நேற்று கைது செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அடுத்த கட்டமாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் இளம்பெண்ணின் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் மேலதிக விவரங்கள் தெரிய வரும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!