வைரலாகும் வீடியோ... போட்டி முடிந்ததும் வீராங்கனையை அடித்து வெளுத்து வாங்கிய பயிற்சியாளர்!

 
அதிர்ச்சி வீடியோ... போட்டி முடிந்ததும்  வீராங்கனையின் முடியை பிடித்து அடித்து தாக்கிய பயிற்சியாளர்! 

ஒருத்தருக்கு இவ்வளவு கோபம் ஆகாது என்பார்கள். ஆனால், அந்த கோபத்தின் பின்னால் இருக்கிற வலியை அவர் மட்டுமே உணர்வார். எத்தனை கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுத்திருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் பயிற்சியாளருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் குவிகின்றன.

அமெரிக்காவில்  உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மகளிர் பாஸ்கெட்பால் அணியின் பயிற்சியாளர், பாஸ்கெட் பால் போட்டி முடிந்ததும், வீராங்கனையின் முடியைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


வடக்கு நார்த்வில்லே உயர்நிலைப்பள்ளியின்  பயிற்சியாளர் ஜிம் ஸுல்லோ. இவருக்கு வயது 81.  போட்டி முடிந்த பிறகு அழுதுகொண்டு இருந்த அணியின் முக்கிய வீராங்கனை ஹெய்லி மான்ரோ முடியை   இழுத்து, கடுமையாக சாடுகிறார். இது குறித்த காட்சி வீடியோவில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ஹெய்லி அந்த இடத்திலிருந்து விலக முயற்சி செய்தபோதும், பயிற்சியாளர் தொடர்ந்து அவரை சாடுவதும், மற்றொரு வீராங்கனை அவரை பாதுகாக்க முயற்சிப்பதும்  தெரிகிறது.

pஆல்

இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். இனி அந்த நபர் அணிக்கு பயிற்சி கொடுக்க மாட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தேவையான ஆதரவு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. மேலும் இது குறித்து பயிற்சியாளர்  போட்டி முடிவடைந்த பிறகு அந்த வீராங்கனை தன்னிடம் கோபத்தோடு தவறான முறையில் நடந்து கொண்டதால் தான்  அப்படி நடந்து கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web