பகீர் வீடியோ.. சக மாணவனை கொடூரமாக தாக்கிய 4 மாணவர்கள் சஸ்பெண்ட்!

 
யுவராஜ்

ஆந்திராவில் கல்லூரி மாணவன் ஒருவனை அவனது வகுப்பு தோழர்கள் நான்கு பேர் மிருகங்களைப் போல கொடூரமாக தாக்கும் வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள குடபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வரபா ஜெயசாய் யுவராஜ். இவர் மல்கிபுரத்தில் உள்ள ஏ.எப்.டி.டி., தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வகுப்பு கண்காணிப்பாளர் யுவராஜ் மீது, அதே கல்லுாரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.


இந்நிலையில் சம்பவத்தன்று யுவராஜை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக கூறிய 4 மாணவர்களும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லாமல், யாரும் இல்லாத தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பழிவாங்கும் வகையில், அவருடன் வந்த மாணவர்கள் 3 பேர், யுவராஜை  தாக்கினர். இதை மற்றொரு மாணவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரம் யுவராஜை தாக்கிய மாணவர்கள், பாட்டில்கள், தேங்காய் மட்டைகள், கற்கள் போன்ற பொருட்களை கொண்டு மாறி மாறி தாக்கினர். தன்னை விட்டுவிடுமாறு யுவராஜ் பலமுறை கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. ஒரு கட்டத்தில் யுவராஜின் சட்டையை கிழித்து கன்னத்தில் கொடூரமாக கடித்துள்ளார் மாணவர். யுவராஜ் மீதான தாக்குதல் நான்கு நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான நான்கு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web