பகீர் வீடியோ.. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட மோதல்.. தலித் இளைஞரை அடித்து கொன்ற கொடூரம்!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த நாரத் ஜாதவ் (28) என்ற தலித் இளைஞர் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள இந்திரகர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று நாரத் ஜாதவ் தனது உறவினருக்கு சொந்தமான வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கிராம தலைவர் பதம் சிங் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் நாரத் ஜாதவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
MP: Sarpanch, Family Fatally Attack Youth Over Illegally-Built Side-Road In Shivpuri#MadhyaPradesh #MadhyaPradeshnews pic.twitter.com/LLVqQlptS9
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 27, 2024
வாக்குவாதம் மோதலாக மாறியபோது, கிராமத் தலைவர் பதம் சிங் மற்றும் அவரது உறவினர்கள் நாரத் ஜாதவை கடுமையாக தாக்கினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நாரத் ஜாதவ், ஷிவ்புரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், கிராம தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் தலித் இளைஞரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!