பகீர் வீடியோ... பள்ளியின் 3வது மாடியிலிருந்து குதித்த 7ம் வகுப்பு மாணவன்
பள்ளியின் 3வது மாடியில் இருந்து மாணவன் ஒருவன் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. மாணவர் தவறி விழுந்து விட்டதாக கூறப்படும் நிலையில், யாராவது மாணவனைத் தள்ளி விட்டனரா என்றும் சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் 3வது மாடியில் இருந்து 7ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று தவறி கீழே விழுந்தார். அவருக்கு கை, கால்களில் பல எலும்பு முறிவுகள் மற்றும் மார்பில் பலத்த உள் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பதட்டமான அந்த வீடியோ காட்சிகளில் மாணவர் மிகவும் பலமாக தரையில் விழுவதைக் காட்டுகிறது.
#WATCH | CCTV: Class 7 Student 'Falls Off' Third Floor Of School Building In Bahodapur Area In Gwalior#MadhyaPradesh #MPNews #gwalior #student pic.twitter.com/Mo8Lu0aDwa
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 8, 2024
மாணவர் தவறி விழுந்தாரா அல்லது வேண்டுமென்றே குதித்தாரா அல்லது யாரேனும் தள்ளினார்களா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சைதன்யா டெக்னோ பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மாணவரின் வகுப்பறை பள்ளி வளாகத்தின் 2வது மாடியில் இருப்பதால், அவரை 3வது மாடிக்கு அழைத்துச் சென்றது யார்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவனின் தந்தையின் கூற்றுப்படி, வகுப்பறையில் உங்கள் மகன் மயங்கி விழுந்து விட்டான் என்று பள்ளி முதல்வர் ஆரம்பத்தில் கூறினார்.. இது தங்களுக்கு பெரிதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார். இது குறித்து பஹோடபூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!