அதிர்ச்சி.. சாலையில் திடீரென உருவான ராட்சத பள்ளம்.. கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!
கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு காகித ஆலையில் இருந்து காகித மூட்டைகளை ஏற்றிய 12 சக்கர லாரி ஒன்று திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் ரயில்வே பீடர் சாலையில் திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த போது கான்கிரீட் சாலை பெயர்ந்து இரண்டு அடி பள்ளம் ஏற்பட்டது.
இதனால் லாரி வலது பக்கம் விழுந்து பள்ளத்தில் சிக்கியது. இதில் சுமை ஏற்றப்பட்ட ஆட்டோக்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நவநீதனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோக்கள் மீது லாரி விழுந்ததால், அதில் சிக்கியவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுக்குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் ரோடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ரோடு, தற்போது உடைந்துள்ளது. இதன் காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவதாகவும், அவற்றை உடனே சரி செய்யுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க