‘அந்த நிர்வாண காட்சியில் டிரெஸ் வேணும்னு கேட்பது அர்த்தமில்லை... அதிரடி கிளப்பிய தமிழ்பட நடிகை!
'அந்தக் காட்சியில் எனக்கு ஆடை வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமில்லை' என்று நடிகை தர்ஷனா தனது ‘ராணி’ படத்தில் நடித்திருந்த நிர்வாண காட்சி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். நடிகை தர்ஷனா ராஜேந்திரன் வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், இந்த படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சுமார் 20 படங்களில் நடித்துள்ள இவர், 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஹே', 'துரைமுகம்', 'புருஷபிரேதம்' மற்றும் 'விரைவில் சந்திப்போம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் 'இரும்புத்திரை', 'கவண்' போன்ற படங்களிலும் நடித்துள்ளதன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்.
தர்ஷனாவின் சமீபத்திய படம் 'பாரடைஸ்', இதில் அவர் ரோஷன் மேத்யூவுடன் நடித்திருந்தார். இந்தப் படத்தை இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானகே இயக்கியுள்ளார். நடிகை தர்ஷனாவுடனான சமீபத்திய நேர்காணலில், 'ஆணும் பெண்ணும்' என்ற ஆந்தாலஜி படத்திலிருந்து 'ராணி' என்ற பிரிவில் ரோஷன் மேத்யூவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். உன்னி.ஆர் எழுதிய 'பெண்ணும் செருக்கணும்' என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு 'ராணி' படம் உருவாகிறது. தனக்கும் ரோஷனுக்கும் இடையே நடந்த அந்தரங்க காட்சி குறித்து பேசிய தர்ஷனா, மற்ற காட்சிகளுக்கு செய்த அதே ஆயத்தங்களை தான் அந்த காட்சிக்கு எடுத்துக் கொண்டதாக கூறினார்.
"ஆணும் பெண்ணும்' படத்துக்காக நான் முதலில் ஒரு நெருக்கமான காட்சியை செய்தேன். அந்தக் காட்சியை எப்படி எடுக்கப் போகிறோம் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இயக்குனர் ஆஷிக் அபு, சிறுகதையை என்னிடம் கொடுத்து, சிறுகதையை மட்டும் படிக்கச் சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை செய்ய நான் இயக்குநர் ஆஷிக் அபு, ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் மற்றும் எனது சக நடிகர் ரோஷன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்.
காலேஜில் நானும் ரோஷனும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சியை எப்படி எடுத்தோமோ, அதே மாதிரி தான் அந்த அந்தரங்கக் காட்சியும் படமாக்கப்பட்டது. அது மனித இயல்பு. அதை பெரிதாகப் பார்க்க வேண்டியதில்லை. அதில் எனக்கு மட்டுமே அந்த கதாபாத்திரம் இருந்தது. அந்தக் காட்சியில் எனது கதாபாத்திரம் ஆடை அணியவில்லை என்று ஸ்கிரிப்ட் கூறினால், எனக்கு உடைகள் வேண்டும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று தர்ஷனா கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!