இன்று காலை பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு!

 
இன்று காலை பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு!

நடிகர் சூர்யா - ஆர். ஜே. பாலாஜி இணையும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. 

கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது.

நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு!

இதனைத் தொடரந்து சூர்யாவின் 45வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் பூஜை இன்று காலை கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது. இதில், சூர்யா, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.  படபூஜையைத் தொடர்ந்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது. ஒரே கட்டமாக 35 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web