கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. கண்ணீர் விட்டு கதறிய 4 வது கணவர்...!!

 
கள்ளக்காதல்

சேலத்தில் என் மனைவியை காணோம் என புகாரளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நானும் என் மனைவியும் கேரளாவிற்கு செல்ல சேலம் வந்ததாகவும், அப்போது திடீரென மாயமானதாகவும் , என் அம்மாவின் 20 சவரன் நகையையும் திருடி சென்றதாகவும் சேலம் காவல் நிலையட்தில் புகார் அளித்தார். இதுக்குறுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை மாயமான பெண்ணை தேட ஆரம்பித்தனர். இந்த வேளையில் அந்த பெண், மதுரையில் இன்னொரு நபருடன் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சேலத்திற்கு அப்பெண்ணை காவல்துறையினர் அழைத்து வந்து புகார் அளித்த கணவர் முன் விசாரணையை தொடங்கினர். அப்போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. புகார் அளித்தவர் என்னுடைய கணவரே இல்லை என்றும், சேலம் ஆத்தூரை சேர்ந்த ஒருவரை,  திருமணம் செய்து எங்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 குழந்தைகளையும், முதல் கணவரிடமே தந்துவிட்டு, இந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி கட்டிட வேலைக்காக  வேறு இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு கட்டிட வேலையிலுள்ள பல ஆண்களுடன் நெருக்கமாகி பழகி 2 பேருடன் குடும்பம் உள்ளார். இப்படித்தான் கட்டிட வேலைக்கு கேரளா பாலக்காடுக்கு சென்றபோது, கடலூரை சேர்ந்த நபருடன் பழகி, ஒரு வருடத்துக்கும் மேலாக 4வது நபருடன் குடும்பம் நடத்தி உள்ளார். கடந்த மாதம், சேலம் ரயில்வே நிலையத்தில் கட்டுமான வேலைகள் நடப்பதால், 2 பேருமே சேலத்துக்கு வந்திருக்கிறார்கள்.

Best police station | தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக சேலம் தேர்வு

அப்போது, அங்கே மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியுடன், இந்த பெண்ணுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர்  5வதாக, மதுரைக்காரரோடு கிளம்பி சென்றுவிட்டார். அந்த மதுரைக்காரருக்கும் கல்யாணமாகிவிட்டது. ஆனாலும், இந்த பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதெல்லாம் தெரியாமல், 4வது கணவன், மனைவியை காணவில்லை என்று போலீசுக்கு புகார் அளித்துள்ளார். இவ்வளவு விஷயமும் தெரிந்தும் என்னுடனே வருமாறு 4வது நபர் அடம் பிடித்துள்ளார். ஆனாம் அதை எல்லாம் கேட்காத அப்பெண் மதுரையை சேர்ந்த நபருடன் தான் செல்வார் என்று ஒற்றை காலில் நின்றுள்ளார்.

Salem, Salem : சேலம்: மாவட்ட நீதிமன்றங்களில் 11ம் தேதி தேசிய மக்கள்  நீதிமன்றம்-மாவட்ட முதன்மை நீதிபதி இன்று தகவல் | Public App

இதனையடுத்து அப்பெண்ணை காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரித்த நீதிபதி உண் விருப்பம் போல செயல்படு என உத்தரவிட்டத்தால் அப்பெண்  மதுரையை சேர்ந்தவரோடு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் நான்கவது நபர் கண்களில் ரத்தம் வர அழுது கொண்டிருந்தார். மேலும் 4வது நபர் நகையை திருடி சென்றதாக அளித்த புகார் போலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 

From around the web