ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் பொளேர்!

 
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் பொளேர்!


தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரது பல நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் லாரி, லாரியாக மணல் கொள்ளை போவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் பொளேர்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருகிறது. இதனை ஒரு ஆங்கில நாளிதழ் அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! கமல்ஹாசன் பொளேர்!


இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகம் உள்ள இடத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவிலேயே நடைபெற்று வருகிறது. இதற்கு நாலாப்பக்கமும் அரசு அலுவலகங்கள் . பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு சென்று கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்து வருகிறது.
மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் தினமும் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் வருவாய் இழப்பு.
இந்த மணலைக் கொண்டு கட்டிடம் கட்டினாலும் இடிந்து விழுந்துவிடும் .நிலைமை அப்படி இருக்க இந்த மணலை அள்ளி கட்டிய கட்டிடங்களில் வசிக்கப் போவது யார்? அவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?


அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா?இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? எனத் தெரியவில்லை. இனியாவது உறங்கி கொண்டிருக்கும் அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேட்டுள்ளார்.

From around the web