கூரையைப் பிய்ச்சுக்கிட்டு கொட்டப் போகும் பணமழை... சூரியன், செவ்வாய் இடமாற்றத்தால் இவர்களுக்கு ஏப்ரலில் அதிர்ஷ்டம்!

 
சூரியன் குரு

ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு நிஜமாகவே அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சுக்கிட்டு கூடவே பணமழையும் கொட்டப் போகுது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானும், கிரகங்களின் தலைவனான சூரிய பகவானும் தங்கள் ராசி மாற்றத்தை ஏப்ரல் மாதத்தில்  செய்யப் போகின்றார்கள்.

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது கிரகப்பெயர்ச்சி ஏற்படுகின்றது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு செல்கின்றார். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய்

மேஷம்: சூரியன் மற்றும் செவ்வாய் ராசி மாற்றும் உங்களுக்கு சிறப்பானதாக அமைய போகிறது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசிகள் 4வது வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்யப் போகின்றார். அதே நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்:

சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய போகிறது. செவ்வாய் பகவான் துலாம் ராசியில் தர்ம ஸ்தானத்தில் அமரப் போகின்றார். சூரிய பகவான் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

செவ்வாய்

மீனம் 

சூரியன் மற்றும் செவ்வாய் உங்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செல்வத்தின் வீட்டில் சூரியன் பெயர்ச்சி அடைகின்றார். 5வது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைகின்றார். இதனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீர் பணலாபம் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web