விடுங்க... என் வாழ்க்கையே போச்சு... காதலனின் கலியாணத்தை தடுக்க வந்த காதலியை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பிரியதர்ஷினி. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நித்திரவிளை நெய்தமங்கலத்தில் வசித்து வருபவர் 27 வயது லிஜீன் . இவரும் அதேபோன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் லிஜீனுக்கும் பிரியதர்ஷினிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதன் பிறகு தாம்பரம் சேலையூரில் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், இருமுறை அபார்ஷன் ஏற்பட்டதாகவும் பிரியதர்ஷினி தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென லிஜீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. லிஜீனுக்கு சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தேவாலயத்தில் அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து பிரியதர்ஷினி போலீசாரிடம் வழக்கறிஞர்கள் மூலம் புகார் அளித்துள்ளார். புகார் ஒருபுறம் எனில், திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிரியதர்ஷினி, தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் தேவாலயத்தில் திருமணம் நடைபெறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து அந்த பெண்ணை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் பிரியதர்ஷினி வர மறுத்ததால் அவரை மகளிர் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றினார்கள்.
அதற்கு பிரியதர்ஷினி வரமறுத்து, என் வாழ்க்கையே போய்விட்டது எனக் கதறி அழுதார்.. இதற்கு போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்போம் என்று கூறினர் . ஆனால் முடியாது என்று அவர் மறுத்துள்ளார். இதனால் பிரியதர்ஷினியை வலுக்கட்டாயமாக போலீசார் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!