என் மனைவியை கடத்திச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள்.. கதறும் ஆட்டோ ஓட்டுநர்!

 
தயாளன்

மதுரை மாநகர போலீஸ் கான்ஸ்டபிள் தனது மனைவியை அபகரித்ததாக ஆட்டோ டிரைவர்  மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். சிவகங்கையை சேர்ந்தவர் தயாளன் (38). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை புதூர் பகுதியில் உள்ள அழகர் நகரில் குடியேறி ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தயாளன் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார்.

அதில், "தல்லாகுளம் காவல் நிலையத்தில் தனிப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர், மனைவியைக் கடத்திச் சென்று தன்னுடன் வாழவிடாமல் தடுத்துள்ளார். புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மனைவிக்கு விவாகரத்து தர சொல்லி மிரட்டுகின்றனர். இதன் பின்னணியில், காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தல்லாகுளம் மகளிர் போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ டிரைவர்  தயாளன் கூறியதாவது, என் மனைவியை கடத்திய போலீஸ்காரர் செல்வராஜ் அழகர் நகரில் வசித்து வந்தார். நானும் அதே பகுதியில் வசிப்பதால், அவரது குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வேன். இதன் மூலம் இரு குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின் நான் சொந்தமாக வீடு கட்டினேன். இந்த கடனை அடைக்க சென்னைக்கு வேலைக்குச் சென்றேன்.

அதன் பிறகு எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடன் வாங்கியவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் தான் நான் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் எனது மகன்களை பார்க்க என் மனைவி அனுமதிக்கவில்லை. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் என்னை மிரட்டியது.  என் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து வெளியேறும்படி மிரட்டினார்கள்.

கணவன் மனைவி சண்டை

இந்த மிரட்டலின் பின்னணியில் காவலர் செல்வராஜ் இருப்பதை கண்டுபிடித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். எனது மனைவியை கடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், தீக்குளிப்பேன்,'' என, ஆட்டோ டிரைவர் தயாளன் கூறினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web