பதறிய போலீசார்... முதல்வர் ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி... வலுக்கும் எதிர்ப்பு!

 
ஸ்டாலின் உருவ பொம்மை
 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயாம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி தேனியில் முதல்வரின் உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட கலெக்டரின் அலட்சியமும், இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லாமல், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு இல்லை என்று பேட்டியளித்ததால் மேலும் 30 பேர் சாராயம் குடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டாலின் உருவ பொம்மை

இந்நிலையில், அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் பூரண மதுவிலக்கு கேட்டு ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. அதிமுக, பாஜக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

போலீஸ்


இந்நிலையில், இன்று தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியினர், முதலமைச்சரை பதவி விலகக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது திடீரென அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர் கைது செ

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web