’உங்கள போலீஸ் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க’.. தற்கொலைக்கு முயன்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கிற்காக காரனோடை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மோகன்ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பார்த்திபன் கொலைவழக்கில் சரணடைந்த மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், பார்த்திபன் கொலைவழக்கில் மோகன்ராஜ் போலியாக சரணடைந்ததாகவும், அவரை வழக்கில் எதிரியாக சேர்க்க மறுத்ததாகவும் கூறினர்.
அப்போது மோகன்ராஜ் 30 கிலோ கஞ்சா வாங்கி விற்றதாக வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த மோகன்ராஜ், ஜாமீனில் 10 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போதிருந்து, மோகன் ராஜ் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மோகன் ராஜ் வெளியே வந்த பிறகும், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், காதலி ஷாலினிக்கு அழுத்தம் கொடுத்தாகவும் மோகன்ராஜ் வீடியோ வெளியிட்டு, அவரும் அவரது காதலியும் ஆந்திராவில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றனர்.
அப்போது, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மோகன்ராஜ், தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் உயிரிழந்தார். அவரது காதலி ஆபத்தான நிலையில் உள்ளார். இந்நிலையில் மோகன் ராஜ் தற்கொலைக்கு முயன்ற போது வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மோகன் ராஜ், “இனிமே போலீஸ் நிம்மதியா இருக்கும்.. தப்பு பண்ணா மட்டும் கேஸ் போடுங்க, அப்பாவிகளை சித்ரவதை செய்யாதீங்க.. ஷாலினி என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. அவளும் சாகப் போகிறாள். " தற்போது மோகன்ராஜ் இறந்துவிட்டதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!