பகீர் வீடியோ... தரையிறங்கிய போது தீப்பிடித்த விமானம்!

 
விமானம்


ரஷியாவில்  ரிசார்ட் நகரமான சோச்சியில் இருந்து துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்திற்கு அஜிமுத் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் வந்தடைந்தது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையைச் சேர்ந்த அந்த விமானத்தில் 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணம் செய்தனர்.

நேற்று மாலை அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில்  விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்தது. விமானத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


விமானம் தரையிறங்கியதும் விமானி கொடுத்த அவசார அழைப்பையடுத்து, விமான நிலையத்தில் மீட்புக்குழு, தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். விமானி துரிதமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணித்த 95 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web