தொடரும் சோகம்.. மாடு முட்டி முதியவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி... !

சென்னையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்து அவ்வப்போது வாகன ஓட்டிகளை பாதசாரிகளையும் தொந்தரவு செய்வதுண்டு. பல நேரங்களில் இதனால் விபத்துக்களும், விபரீதங்களும் ஏற்பட்டு விடுகின்றன. அந்த வகையில் திருவல்லிக்கேணி பகுதியில் பால் வாங்க சென்ற முதியவரை மாடு முட்டி கீழே தள்ளியது. அதில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மாடு திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் நிலை தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவல்லிக்கேணி வேணுகோபால் தெருவில் வசித்து வருபவர் 71 வயது கன்னியப்பன். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இன்று காலை கண்ணியப்பன் திருவல்லிக்கேணி தேரடி தெருவில் பால் கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாடு ஒன்று முதியவர் பின்பக்கம் முட்டி கீழே தள்ளியது. இதில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் முதியவரை மீட்டு ஆட்டோவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் முதியவர் கண்ணியப்பனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணியினை மேற்கொண்டனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டிய போது அதிகாரிகள் முகாமிட்டு மாடுகளை பிடித்தனர். தற்போது மீண்டும் விட்டு சென்றதால் இந்நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க