கள்ளக்குறிச்சியில் அடுத்த அதிர்ச்சி... பல பெண்களுடன் உல்லாசம்... போலீசாரை அதிர வைத்த சாமியார்!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள அய்யனார் கோவிலுக்கு, போயர் தெருவில் வசிக்கும் முத்தையன் என்பவர் அடிக்கடி சென்று வருவார். அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பில்லி சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடமணிந்து முத்தையன் செய்து வந்ததாக தெரிகிறது.
அதே பகுதியில் வசித்து வரும் டிரைவர் ஒருவருக்கும் முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொண்டு தனது 50 சென்ட் நிலத்தை ரூ.4 லட்சத்திற்கு முத்தையனுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார் டிரைவர். இவர்களுக்கு இடையேயான பழக்கத்தில், நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும் முத்தையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே தகாத உறவாக மாறியது.
இதனை அறிந்த டிரைவர் முத்தையனையும், தனது மனைவியையும் தனித்தனியே பல முறை எச்சரித்துள்ளார். முத்தையனிடம் தர வேண்டிய பாக்கி பணத்தையும் கேட்டு நெருக்கியுள்ளார். இது ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறிய நிலையில், நிலத்தையோ, பணத்தையோ திருப்பி கேட்டால் உனது மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பரப்புவேன் என்று மிரட்டியுள்ளார்.
முத்தையன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ஓட்டுநர், இது குறித்து உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
முத்தையன் அந்த பகுதியில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் முத்தையனின் லேப்டாப்பிலும், செல்போனிலும் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். முத்தையனிடம் இருந்து லேப்-டாப், 5 செல்போன்கள், 5 பென் ட்ரைவ்கள் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்த போலீசார், முத்தையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலி சாமியார் குறித்து பல முறை எச்சரித்தும் பெண்கள் வயது பேதமில்லாமல் இப்படிப்பட்ட ஆண்களிடம் சிக்கி தங்களது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்கின்றனர் என்று போலீசார் எச்சரித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!