திருச்செந்தூர் யானையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி... காவலுக்கு இருந்த விவசாயியியை மிதித்து கொன்ற காட்டு யானை... !
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை பாகன் உட்பட 2 பேரை அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் அதே போல் மற்றோரு சம்பவம் ஈரோட்டில் அரங்கேறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கடம்பூர் குத்தியாலத்தூர் அணைக்கரை பைரமரத்தொட்டி பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மாறன்.
இவர் வீட்டின் அருகிலேயே சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் மாறனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால் விவசாயி மாறன் சோளக்காட்டில் காவல் இருந்தார். வழக்கம் போல் நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மாறன் சோளக்காட்டில் காவலுக்காக படுத்திருந்தார். அப்போது தோட்டத்துக்குள் ஒரு காட்டு யானை புகுந்து பயிர்களை நாசம் செய்ததை பார்த்தார். அதிர்ச்சி அடைந்த மாறன் தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கத்தி கூச்சலிட்ட மாறனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டத்தில் காவலுக்கு இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அங்கு மாறன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு மாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!