பகீர்... ஜன்னல் கம்பியில் சிக்கிய சிறுமி!!
வீட்டில் குழந்தைகள் இருந்தாலே ஏதாவது வம்பு தான். எதையாவது சேட்டை செய்து கொண்டே இருக்கும். விளையாட்டு சில நேரங்களில் விபரீதமாகி விடும். சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பில் 5 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த குழந்தை தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்துவிட்டது. அதில் குழந்தையின் கழுத்துப் பகுதி ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்டது.
21 மீட்டர் உயரத்தில் தொங்கியபடி கதறி அழுத குழந்தையின் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டு இளைஞர்கள் சிலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பக்கவாட்டில் ஏறி லாவகமாகக் குழந்தையைக் காப்பாற்றினர்.
அந்த இளைஞர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தையை அதன் பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வெளியே சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!