குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த மருத்துவ நிர்வாகம்!
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பானை வெட்ட அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாள் தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவு விமர்சகர் யூடியூபர் இர்ஃபான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி வெளிநாட்டில் கருவின் பாலினத்தை பரிசோதிக்கும் வீடியோ மூலம் சர்ச்சையை கிளப்பினார். இதன்பிறகு குழந்தை பிறந்த அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
ஏன்டா, காசு வருதுன்னு எத வேணும்னாலும் வீடியோ எடுத்து போடுவிங்களாடா.....
— Tamil BLASTER (@TamilBlaster) October 22, 2024
இண்ணும் என்னென்ன வீடியோ வரப்போகுதோ!? தெரியல...#BabyBirth #Irfan #tamilblaster pic.twitter.com/oIkyqE5i4o
இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதாக மருத்துவர்களிடம் கூறினார். இது மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதை அறிந்த டாக்டர்கள், மருத்துவமனையின் பிரபலம் கருதி இதற்கு சம்மதித்துள்ளனர். இர்பான் தொப்புள் கொடியை வெட்டுவதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையான நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மாசு. சுப்பிரமணியன், இர்பானை மன்னிக்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கேட்டாலும், அவரை விட மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்ட அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாள் தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உள்நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், தடை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!