அவலத்தின் உச்சம்.. மகன் சடலுத்துடன் வாழ்ந்து வந்த பார்வையற்ற பெற்றோர்கள்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பார்வையற்றோருக்கான காலனியில் 60 வயது கணவன் மனைவி 30 வயது மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாகோல் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று நேற்று தேடினர். அப்போது, அந்த வீட்டில் தம்பதியின் மகன் இறந்து கிடந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தூக்கத்தில் இறந்து விட்டதாக தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூத்த அதிகாரி சூர்யா நாயக் கருத்துப்படி, பார்வையற்ற தம்பதிகளுக்கு தங்கள் மகன் இறந்தது குறித்து எதுவும் தெரியாது. அவர்கள் மகனிடம் உணவு, தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் 4 நாட்களாக உணவின்றி வயதான தம்பதி தவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களால் சரியாக பேச முடியவில்லை. அவர்களின் குரலும் வாடிப்போனது.
இதனால், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை கூட கூப்பிட முடியாமல் தவித்தனர். வயதான, பார்வையற்ற தம்பதியினர் பாதி மயக்கத்தில் இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தம்பதியரின் மூத்த மகன் நகரின் மறுபுறத்தில் வசிக்கிறான். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!