திணறுது ஜிஎஸ்டி சாலை... பெருங்களத்தூரில் ஒரே நேரத்தில் குவியும் மக்கள்!

 
போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர்

தமிழகத்தில் பொங்கல் தொடர் விடுமுறை முடிவுக்கு வந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னையை நோக்கி இன்று ஒரே நேரத்தில் திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி குவிந்து வருவதால் சென்னைக்கு வரும் பிரதான சாலையான பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் நேற்று மாலை முதலே நெரிசலைத் தவிர்க்கும் விதமாக சென்னை நோக்கி வரத் துவங்கியிருந்த நிலையிலும் நேற்று நள்ளிரவு முதலே பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதல் கிளம்பியவர்கள் தற்போது சென்னை பிரதான சாலையில் குவிந்து வருவதால் அந்த பகுதி முழுவதுமே வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. 

போக்குவரத்து

பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர்.

முன்னதாக சென்னையிலிருந்து சுமார் 8.73 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இது தவிர சொந்த வாகனங்களில் சென்றவர்கள், தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்றிருப்பவர்கள் என்று அனைவருமே மீண்டும் சென்னையை நோக்கி குவிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளே உஷார்!! சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

லட்சக்கணக்கில் சொந்த ஊர் நோக்கி கிளம்பிச் சென்ற இந்த பயணிகள் அனைவரும் சென்னைக்கு திரும்பி ஒரே நேரத்தில் வந்து குவிவதால் சென்னைக்கு நுழையும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web