அகில இந்திய கராத்தே போட்டியில் கலந்துக்கொள்ளும் சிறுமி.. 27 பதக்கங்களை வென்று அசத்தல்!

 
குரு அனுஸ்ரீ

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருநாதன், கவிதா தம்பதி. இவர்களது மகள் குரு அனுஸ்ரீ. இவர் பரமக்குடி ஐரா வைஷ்யா மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தேசிய கராத்தே சாம்பியன். இந்நிலையில், உலக ஷோடோகான் கராத்தே கூட்டமைப்பு  நடத்திய கராத்தே போட்டி மதுரை அருகேயுள்ள திருமங்கலம் சண்முக லட்சுமி ஹாலில் நடந்தது.

இப்போட்டியில் குமிட்டே பிரிவில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி தங்கம் வென்று சாதனை படைத்தார். டிசம்பர் 13ம் தேதி டெல்லியில் நடக்கும் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே 27 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்து வரும் குரு அனுஸ்ரீக்கு சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாதித்து வரும் குரு அனுஸ்ரீக்கு சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web