அதிரடி காட்டும் பறக்கும் படை.. உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 3.54 லட்சம் பணம் பறிமுதல்!

 
பணம் பறிமுதல்

ஆம்பூர் ஆலங்காயம் பகுதிகளில் தேர்தல் விதிமுறையை மீறி உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 3.54 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில்,வேலூர் மக்களவை தொகுதியிற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் நவீன் குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தேர்தல் விதிமுறையை மீறி பாலூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் கொண்டு செல்லப்பட்ட 2.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலையில்  ஒப்படைத்தனர். இதே போல் ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் உள்ள ஆலங்காயம் - ஆசனாம்பட்டு சாலையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையிலான  அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜிதேந்திர சிங் என்பவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்றது, தெரியவந்தது,இதை தொடர்ந்து 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை  பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அப்பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி  தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web