‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்கமுடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரள மாநிலத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை படைத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தபோதிலும் மறுபுறம் சர்ச்சைகளால் நிறைந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
படத்தின் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து வெற்றிநடை போடுகிறது. குறிப்பாக, இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு நடிகர் மோகன்லால் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்புரான் படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வி.வி. விஜீஷ் தனது மனுவில், ‘இந்தப் படம், 2002 குஜராத் கலவரத்தை சித்தரிப்பதால் வகுப்புவாத வன்முறையைத் தூண்டக்கூடும். புலனாய்வு அமைப்புகளின் நம்பகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இப்படம் சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி விடும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எம்புரான் படத்தால் எங்கேயும் ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா என, வழக்குத் தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அவரிடம் நீங்கள் எம்புரான் பார்த்துவிட்டீர்களா? உங்கள் ஆட்சேபனை என்ன? இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்த நீதிபதி, கிட்டத்தட்ட ஒரு வாரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட வன்முறைக்கான ஆதாரங்களை வழங்கும்படி மனுதாரரை கேட்டுக் கொண்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ இந்த படம் குறித்து எந்தவொரு சம்பவங்களோ அல்லது புகார்களோ பதிவாகவில்லை’ என தெரிவித்துள்ளார். எம்புரான் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருப்பதோடு, இந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!