சபாஷ் வீடியோ... நடுராத்திரி ஆட்டோவில் சுற்றும் பெண் அதிகாரி.. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கண்காணிப்பு!
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உதவி காவல் ஆணையாளராக பணிபுரிந்து வரும் சுகன்யா சர்மா, நகரின் இரவு நேர பெண்களின் பாதுகாப்பு நிலையை உறுதி செய்ய அதிரடி சோதனையில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக மப்டியில் தான் ஒரு சுற்றுலாபயணி எனக்கூறி கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகில் நின்று, போலீசாரை அழைத்து உதவி கேட்டார்.
आगरा में एसीपी डॉ. सुकन्या शर्मा ने आगामी पावन पर्व पर महिलाओं की सुरक्षा को लेकर एक बड़ा कारनामा कर दिखाया है। उन्होंने खुद को एक अकेली महिला बनकर सादा ड्रेस पहनकर शहर की सड़कों पर निकल पड़ीं और देखा कि रात के अंधेरे में महिलाओं की सुरक्षा के लिए क्या इंतजाम किए गए हैं।
— Madan Mohan Soni (@madanjournalist) September 28, 2024
डॉ.… pic.twitter.com/03OGPvNV7l
போலீசார் உடனடியாக பதிலளித்து, பாதுகாப்பான இடத்தில் நிற்கும்படி அறிவுறுத்தினர். அத்துடன் பெண் ரோந்து குழுவினர் அவரிடம் விசாரித்து அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதன் மூலம் அவசரகால உதவி முறைகள் சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்து, போலீசாரின் செயல்பாடுகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்லார். இதனை தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு நிலையை மேலும் அறிந்து கொள்ளும் வகையில் அங்கிருந்த , ஒரு ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார். ஆட்டோ ஓட்டுநரிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை கவனத்தில் கொண்டு, அவர் தனது கடமையை நியாயமாக செய்தார். இந்த சோதனையிலும் ஆட்டோ ஓட்டுநர் சிறப்பாக தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுகன்யா சர்மாவின் இந்த புதுமையான அதிரடி சோதனை செயல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நெருக்கடியில் உள்ள பொதுமக்களின் அனுபவங்களை நேரடியாகச் சந்தித்து, அதன் மூலம் தீர்வு காணும் முயற்சி மற்ற நகரங்களில் உள்ள காவல் துறையினராலும் பின்பற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!