நெகிழ்ச்சி... 500 குடைகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி !

 
வரதராஜன்


 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும்  ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பதிவாகி வருகிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வப்போது கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சில நேரங்களில் மழை பொழிவு காலங்களில் சில நேரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்து பள்ளிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.  

வரதராஜன்


மயிலாடுதுறை மாவட்டம் ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம், மேலும் அவர்களின் குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றன. இந்நிலையில்  மழைக்காலத்தில் குழந்தைகளை நாங்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். எங்களிடம் குடைகள் இல்லை புதிதாக வாங்க வசதியும் இல்லை. இதனால் பல சமயங்களில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு மழை நேரங்களில் அனுப்புவது கிடையாது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.  

வரதராஜன்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர்   தனது சொந்தப் பணத்தில் குடைகள் வாங்கி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இச்சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகரவட்டாரம் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன்.இவர்  இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்  மழைக்காலத்தில் தடையின்றி பள்ளிகளுக்கு சென்று கல்வி பயில ஏதுவாக குடைகள் வழங்கி வருகிறார்.அதன்படி, இந்தாண்டு மழைகாலத்தை அடுத்து சீர்காழி அருகே நல்லநாயகபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, மாதானம், எருக்கூர்  கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் சுமார் 500 மாணவ - மாணவிகளுக்கு குடைகளை வழங்கியுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web