தியேட்டருக்கு படம் பார்க்க வந்த இளைஞரை தாக்கிய ஊழியர்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..!!

 
சிரஞ்சீவி

குடும்பத்துடன் படம் பார்க்க வந்த இளைஞரை தாக்கிய சம்பவத்தில் திரையரங்கு ஊழியர்கள் 4 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள வடுகநாதன் திரையரங்கில் சிரஞ்சீவி என்ற இளைஞர் தனது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவரை தடுத்துநிறுத்திய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிரஞ்சீவி சகோதரர்களும் அவருக்கு ஆதரவாக பேச, திரையரங்க ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.

அதில், சிரஞ்சீவியின் தலையில் காயம் ஏற்பட்டு, 10 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து காயத்துடன் வீடியோ வெளியிட்டு அந்த இளைஞர் நியாயம் கேட்டுள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஊழியர்கள் இளைஞரை தாக்கியதை உறுதிப்படுத்தினர்.

youth

இதனையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக வடுகநாதன் திரையரங்க ஊழியர்கள் 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் படம் பார்க்க சென்ற இளைஞரை திரையரங்க ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web