ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிய டிரைவர்... அலறி கூச்சலிட்ட பயணிகள்!

 
பேருந்து

 ஐபிஎல் மேட்ச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த மேட்ச் முடியும் வரை வெறியர்களாக மாறி சுற்றி இருப்பவர்களை கதிகலங்க அடித்துவிடுவர். அந்த வகையில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் மேட்ச் பார்த்துக் கொண்டே ஓட்டியதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேரும் திகிலடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  பேருந்து ஓட்டுனர்  தனது  மொபைலில் கிரிக்கெட்டை பார்த்தபடி பேருந்தை  ஓட்டினார்.  

ஐபிஎல்


இதனால் அந்த தனியார் பஸ், முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பேருந்து மீது 2 முறை மோதுவதுபோல் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனே பிரேக் போடப்பட்டதால் அனைவரின் உயிரும் தப்பியது எனலாம்.  பயணிகள் சார்பில் சம்பந்தப்பட்ட  டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரேக் பிடித்த போது  இருக்கைகளில் இருந்து பயணிகள் கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சிலர் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஐ.பி.எல்

இருப்பினும் அதை ஒரு பொருட்டாக கருதாத டிரைவர், தொடர்ந்து தனது செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.  பேருந்து  விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.   இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.   இது குறித்து விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருககேசன்  கிரிக்கெட் பார்த்தபடி தனியார் பஸ்சை டிரைவர் ஓட்டியது தொடர்பாக புகார் வந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் உடனடியாக ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனக் கூறியுள்ளார்.
 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web