அதிர்ச்சி வீடியோ... நடுவானில் கீழே விழுந்த விமானத்தின் கதவு... அலறிய பயணிகள்!
அமெரிக்காவிலிருந்து சென்ற போயிங் விமானத்தின் கதவுகள் திடீரென கீழே விழுந்தன. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நியூயார்க் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துவிட்டது.
🚨#BREAKING: Alaska Airlines Forced to Make an Emergency Landing After Large Aircraft Window Blows Out Mid-Air ⁰⁰📌#Portland | #Oregon
— R A W S A L E R T S (@rawsalerts) January 6, 2024
⁰A Forced emergency landing was made of Alaska Airlines Flight 1282 at Portland International Airport on Friday night. The flight, traveling… pic.twitter.com/nt0FwmPALE
இதுகுறித்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. விமானம் புறப்பட்டு பறந்து சென்று, 33 நிமிடங்களுக்கு பிறகு இச்சம்பவம் நடந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இச்சம்பவம் குறித்து விமான பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.
இதன் எதிரொலியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் . டெல்டா விமான நிறுவனத்தின் விமான பிரதிநிதி ஒருவர் எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் எனக் கூறியுள்ளார். இது குறித்து அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்துகிறது.