அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி... எரிவாயு ஊழியர் படுகாயம்!!
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கோயில் அக்ரஹார வீதியில் இன்று காலை 10 மணிக்குவீட்டில் சிலிண்டர் பழுதானது. உடனடியாக எரிவாயு ஊழியரை சரி செய்ய போன் செய்து அழைத்தனர். சிலிண்டரை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்துவிட்டது. அதில் வீடு முழுவதும் பொருட்கள் சிதறின.
உடனடியாக தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த கோரதீவிபத்தில் 2 பேர் பலியாகினர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பிஎஸ்.என்.எல். ஊழியர் பார்த்தசாரதி, பக்கத்து வீடு தனலட்சுமி இருவரும் பலியாகினார்.
சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமாரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...