அதிகாரிகளை விரட்டியடித்த கொடூரம்... நில மாஃபியாக்கள் கட்டிய தனியார் பாலம்!

பீகார் மாநிலத்தில் புர்ணியா மாவட்டத்தில் காரி கோசி நதியில் தனியார் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் இது அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி இல்லை. நில மாஃபியாக்கள் தங்கள் பணத்தில் இதனை கட்ட முயற்சித்துள்ளனர். அவர்கள் நோக்கம், நதிக்கு அப்பாலுள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை பல மடங்கு விலைக்கு விற்க வேண்டுமாம்.
गजबे है..जमीनों के दाम बढ़ाने के लिए बिल्डरों ने बनाया फर्जी पुल
— NDTV India (@ndtvindia) March 28, 2025
बिहार के पूर्णिया में बिल्डरों ने जमीनों के दाम बढ़ाने के लिए अपने पैसों से बनाया फर्जी पुल, जिससे लोगों को लगे यहां से कोई बड़ा प्रोजेक्ट निकलने वाला है #Bihar | #ViralVideo pic.twitter.com/RB2vQK5FoY
இந்த பாலம் குறித்து நகராட்சி துறைக்கு முற்றிலும் தகவல் இல்லாதது, மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாலம் கட்டப்படும் இடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் JCB உடன் சென்றபோது, உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்த்து கோஷமிட்டனர். “இந்த பாலம் எங்களுக்குத் தேவை, பயனளிக்கிறது” எனக் கூறிய உள்ளூர்வாசிகள் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் விரட்டியடித்தனர். “இந்தப் பாலம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் பெறவில்லை. ஆனால் உள்ளூர் மக்கள், தாங்கள் தனிப்பட்ட முறையில் கட்டியதாகக் கூறுகின்றனர். இதற்கு அதிகாரிகள் மேலதிக ஆணையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறியுள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!