பெரும் சோகம்... டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிட்ட குழந்தை புரை ஏறி மூச்சுத்திணறி உயிரிழப்பு!

 
லட்சுமி


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் மற்றும் அமுலு. குறவர் இனத்தை சேர்ந்த இவர்களின் 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமி மேகலா. இந்தக் குழந்தை ஏற்கனவே 2 நாட்களாக உடல் நலக் குறைபாடு காரணமாக  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தது.

ஆம்புலன்ஸ்

 குழந்தைக்கு டீயில் பிஸ்கட்டை தோய்த்து  சாப்பிடக் கொடுத்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட்அது.  கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில்  குழந்தையை தூக்கி கொண்டு பதறி அடித்தபடி சென்றனர். முதலுதவி அளித்து மேல்சிகிச்சை அளிக்க  செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து  வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு  பெற்றோரிடம் குழந்தை உடல் ஒப்படைக்கப்பட்டது.  உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்த நிலையில்  மூச்சுத்திணறலே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web