ரஷிய அதிபரை விமர்சனம் செய்த சமையல் கலைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
ஜிமின்

 

2022 முதல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக, அதிபர் விளாதிமீர் புதினை ரஷ்ய சமையல் கலைஞர் அலெக்ஸி ஜிமின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ரஷிய தொலைக்காட்சி நிறுவனத்தில் இவர்  சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்த நிலையில்  ரஷிய அதிபரை விமர்சித்ததையடுத்து, அவர் தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

புதின்


இதனைத் தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து  வந்தார். இங்கிலாந்துக்கு சென்றதிலிருந்து, அவர் ரஷியாவுக்கு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.உக்ரைனுக்கு நன்கொடை வழங்கியதால், அவருக்கும் அவர் வேலைபார்த்து வந்த உணவகத்துக்கும் அச்சுறுத்தல் வந்ததாகவும் உணவக உரிமையாளர் தெரிவித்தார்.

புதின்

இந்நிலையில், அவர் பிரிட்டன் ஆங்கிலோமேனியா என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக செர்பியா சென்றிருந்தார்.அவர் செர்பியாவில் ஒரு ஹோட்டலில் ஜிமின் தங்கியிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார்  அவரது மரணத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web