ஒரே மெயிலில் 99 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிஇஓ... அதிர்ச்சி விளக்கம்!

 
america


 
அமெரிக்க நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி ஒருவர், தனது ஊழியர்களில் 90% பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 110 ஊழியர்களில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். நிறுவனத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அக்கூட்டத்தில் 11 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 11 பேரைத் தவிர மற்ற  அனைவரையும் பணியிலிருந்து நீக்கி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.  

america


அமெரிக்க   நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பால்ட்வின், காலையில் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு மின்னஞ்சலில் அழைப்பு விடுத்துள்ளார். முன்கூட்டியே இந்தக் கூட்டம் முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில்   இந்தக் கூட்டத்தில் 11 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.  ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 99 பேருக்கும் பணிநீக்க கடிதத்தை அனுப்பியுள்ளார்.இந்தக் கடிதத்தை பணிநீக்கம் பெற்ற ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த மின்னஞ்சல் கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

america


இது குறித்து தலைமை செயல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில்  ''இன்று காலை ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்காதவர்கள், இதனை அதிகாரப்பூர்வ நோட்டீஸாக கருதிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட உங்கள் பணியின் ஒரு பகுதியை செய்யத் தவறிவிட்டீர்கள்.  இதன் மூலம் நமக்கு இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்கிறேன். நிறுவனத்துக்குச் சொந்தமானது ஏதாவது உங்களிடமிருந்தால், தயவு செய்து ஒப்படையுங்கள். நிறுவனத்திலிருந்து உங்கள் கணக்குகளுடன் வெளியேறுங்கள். உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள நான் வாய்ப்பளித்தேன். ஆனால், நீங்கள் அதனை தவறவிட்டீர்கள். 110 பேரில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேர் மட்டுமே வேலையில் தொடர்வார்கள். மீதமுள்ள  அனைவரும் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர்'' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web