அதிர்ச்சி... பிரபல காப்பீட்டு நிறுவன சிஇஓ சுட்டுக்கொலை!

 
பிரையன் தாம்சன்
 


 
 

அமெரிக்காவில் மினசோட்டா மாகாணத்தை சார்ந்த சர்வதேச நிறுவனம் ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனமாக அறியப்படுகிறது. யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் கிளை நிறுவனமான யுனைடெட் ஹெல்த் கேர் 4.90 கோடி அமெரிக்கர்கள் பயன்பெறுகின்றனர்.  
இதன் தலைமை செயல் அதிகாரி  50 வயது பிரையன் தாம்சன். இவர் நேற்று டிசம்பர் 4ம் தேதி  புதன்கிழமை காலை 6.45 மணியளவில் மேன்ஹேட்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக வந்திருந்தார்.

அப்போது  அந்த ஹோட்டலின் வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த மர்ம நபர் பிரையனை கொலைச் செய்ய திட்டமிட்டு அங்கு காத்திருந்ததும், பிரையன் அந்த ஹோட்டலுக்குள் நுழைய நடந்து சென்றபோது தான்  வைத்திருந்த துப்பாக்கியால் அவரை பலமுறை சுட்டுவிட்டு தப்பியோடியதும் நியூயார்க் நகர போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  

2020ம் ஆண்டு அந்நிறுவனத்தில் இணைந்த பிரையன் தாம்சன், 2021ம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த் கேரின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 50 வயதாகும் பிரையனுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.  அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வரும் நியூயார்க் நகர போலீஸார், கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழஙப்படும் என அறிவித்துள்ளனர்.

From around the web