அசுர வேகத்தில் வந்த கார்.. சாலை கடக்க முயன்ற தம்பதி மீது மோதிய கொடூரம்.. பகீர் வீடியோ வைரல்!

 
சாமி - ஜானு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் சாலையைக் கடக்கும் போது கணவன்-மனைவி இருவரும் கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்றிருந்த வயதான தம்பதிகள் மீது வேகமாக வந்த கார் மோதி இருவரையும் தூக்கி வீசியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தம்பதிகள் பாலக்காடு மாவட்டம், நெம்மர வந்தாழி தேக்காடு பகுதியைச் சேர்ந்த சாமி (வயது 65) மற்றும் அவரது மனைவி ஜானு (வயது 60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் எலவாஞ்சேரியை சேர்ந்த பிரேம்நாத் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web