மலையில் துளை! பாறையில் கால்வாய்! வியப்பூட்டும் குளம்!

 
மலையில் துளை! பாறையில்  கால்வாய்! வியப்பூட்டும் குளம்!

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது கட்டாக் மாவட்டம். இங்குள்ள திகிரியா தாலுகாவில் சுதர்ஷன்பூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் தண்ணீரில்லாமல் வறண்ட பூமியானது. மழைக்காலங்களில் வெள்ளம். வெயில் காலங்களில் வறட்சி. ஆனால் அரசின் நிதி மற்றும் அதிகாரம் மற்றும் ஆள் பலமின்றி கிராமத்து இளைஞர்களே ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர். அந்த வகையில் இதே கிராமத்தை சேர்ந்த 40 இளைஞர்கள், தங்களது கிராமக் குளங்களுக்கு மழை நீர் வந்து சேரும் வகையில், ஒரு மலையையே குடைந்து, கால்வாய் அமைத்துள்ளனர்.

மலையில் துளை! பாறையில்  கால்வாய்! வியப்பூட்டும் குளம்!


ஒரு ஏக்கர் பரப்பளவும் 20 அடி ஆழமும் கொண்ட அந்த கிராமத்து குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. அந்த கிராமத்துக்கு மட்டுமல்ல அருகில் உள்ள கிராமங்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அருமையாக உருவாக்கியுள்ளனர்.
2020 மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4 லட்சம் ரூபாய் செலவில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. ஆனாலும் போதுமான நீர் வந்து சேரவில்லை.

மலையில் துளை! பாறையில்  கால்வாய்! வியப்பூட்டும் குளம்!


அந்த கிராமத்து இளைஞர்கள் ஒன்று கூடி மழை நீர் கிராமத்துக்கு வராமல் எங்குச் செல்கிறது என அவர்களே ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு மலைப் பகுதிக்குள் கால்வாய் வெட்டி பாறைகள், கடுமையான காடுகளுக்குள் சென்று 8 நாட்கள் கடுமையான வேலைகளுக்கு பிறகு கால்வாய் உருவாக்கப்பட்டது.இதே மலைப் பகுதியைச் சுற்றி 150 குடும்பங்களில் 800 பேர் வசித்து வருகிறோம். எங்களின் பிரதான தொழிலே விவசாயம்தான் .


தண்ணீர் இல்லாமல் பல தலைமுறைகளாக சிரமப்பட்டு செய்த நிலையை 40 இளைஞர்களின் உழைப்பு வென்றுள்ளதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இளைஞர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். விரைவில், இந்த குளத்தில் மீன் வளர்ப்புத் திட்டத்தையும் செயல்படுத்தவிருப்பதாகவும் இளைஞர்கள் உற்சாகம் பொங்கத் தெரிவிக்கின்றனர்.

From around the web