14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் !

 
இலவச மாற்று வாக்காளர் அடையாள அட்டை! தேர்தல் ஆணையம் !


 
இந்தியாவில் கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம்  மாநிலங்களில் நடைபெற இருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  இந்த தொகுதிகளில்  நவம்பர் 13 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 13ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்


இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நவம்பர் 13ம் தேதி புதன் கிழமை  கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில்  நடைபெற உள்ளதால், அவை வாக்கு சதவிகிதத்தை பாதிக்கலாம் என கருதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை மாற்றியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவம்பர் 23 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

ஜம்மு - காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்

அதே நேரத்தில்  மகாராஷ்டிரா தேர்தல் நெருங்கி வருவதால், அத்துடன் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாகவும் அதனால் இடைத்தேர்தலை  தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web