அதிர்ச்சி... போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டிய சிறுவர்கள்!

 
கத்தி
 

 


தமிழகம் முழுவதும் பாலியல் அத்துமீறல் சம்பவங்களும், குற்றச் செயல்களும் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சிறுவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளம்சிறார்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மில்லர்புரம் மையவாடி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றுக் கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டி உள்ளனர். 

இது குறித்து போலீசார் விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற தியோராஜ் (24), இரு இளம்சிறார்கள் என்பதும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web