போர்க்களமாக மாறிய பிக்பாஸ் வீடு... அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்!
பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் நடந்து வரும் நிலையில், போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியதால் பிக்பாஸ் வீடு போர்களமாக மாறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டை யார் துவக்கி வைத்தது என்று புரியாமல் பிக்பாஸ் ரசிகர்கள் அடுத்து நடக்கப்போகும் நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்துள்ளது. மற்ற ஏழு சீசன்களை ஒப்பிடும் போது நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் மந்தமாகவே சென்று வருகிறது.
#Day53 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 28, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/si8aR2Mvo9
50 நாட்களைக் கடந்துமே இந்த சீசனில் பெரிதாக சுவாரஸ்யம் எதுவும் இல்லை. எந்த சீசனில் இல்லாத அளவிற்கு ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுமே இந்த சீசன் பெரிதாக எடுபடவில்லை.
இதில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்திருக்கும் ராணவ் மற்றும் ரயான் இருவருக்குமிடையில் அடிதடி நிகழ்த்திருக்கும் புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பொம்மைக்காக நடந்த டாஸ்க்கில் ரயான் மற்றும் ராணவ் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி வரை சென்றது. இதனை மற்றப் போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தியுமே இருவரும் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நிஜமாகவே நடந்த சண்டையா அல்லது கவனக்குவிப்பிற்காக இவர்கள் எடுத்து நடத்தியதா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!