மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா?.. ஒரே நேரத்தில் 5 இஸ்லாமிய நாடுகளை தாக்கும் இஸ்ரேல்!

 
இஸ்ரேல்

ஈரான் இஸ்ரேல் மீது 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது. ஈரானும் இஸ்ரேலும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளாததால், இந்த தாக்குதல் இஸ்ரேலை கோபப்படுத்தியது. இன்று, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அருகிலுள்ள கராஜ் நகரங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேலில் இருந்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தலைமையகத்தையும் இஸ்ரேல் குறிவைத்தது. மேலும், சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால் ஒரே நாளில் 3 நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் காஸாவில் ஹமாஸுடன் இஸ்ரேல் போர் தொடர்கிறது. லெபனானின் ஹிஸ்புல்லாவையும் எதிர்கொள்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

மத்திய கிழக்கில் உள்ள ஒரே யூத நாடு இஸ்ரேல். இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று கூடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் பாலஸ்தீனத்தின் காசா, லெபனான், ஈரான், சிரியா, ஈராக் ஆகிய 5 இஸ்லாமிய நாடுகளுடன் இஸ்ரேல் மோதுகிறது. இது இப்போது மூன்றாம் உலகப் போரின் தொடக்கப் புள்ளியாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே நேரத்தில் 5 இஸ்லாமிய நாடுகளை இஸ்ரேல் எதிர்த்து வருவது உலக மக்களிடையே பெரும் பத்ற்றம் நிலவி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web