ஷாக் வீடியோ... வங்கி மேலாளர் நாற்காலியிலேயே மயங்கி சரிந்து பலி!

 
ராஜேஷ் குமார்
 கொரோனா காலகட்டத்துக்கு பிறகு திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. விளையாடிய போது திடீர் மரணம், நடனம் ஆடிய போது மரணம், நடந்து சென்ற போது மயங்கி சரிந்து மரணம், மணமேடையில் மயங்கி சரிந்து மரணம் என திடீர் உயிரிழப்புக்கள் இளம் வயதில் அதிகரித்து வருகிறது.உத்திரப்பிரதேச மாநிலத்தில் மகோபா நகரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளர்  ராஜேஷ்குமார் ஷிண்டே. இவர் ஜூன் 19ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றார்.  

அன்று வழக்கம் போல் பணிக்கு வந்திருந்த ராஜேஷ்குமார்  சக ஊழியர்களுடன் சேர்ந்து லேப்டாப்பில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென நாற்காலியில் உட்கார்ந்தவாறு கீழே சரிந்து விழுந்தார். அவருடைய கண்கள் மேலே சென்றவாறு மூச்சுப் பேச்சின்றி விழுந்தார். அருகில் இருந்த  சக ஊழியர்கள் உடனடியாக அவருக்கு சிபிஆர் செய்ததோடு முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

இருப்பினும் அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து  விட்டதாக கூறிவிட்டனர். மேலும் அவருக்கு சுமார் 30 வயது இருக்கும் நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நாற்காலியில் இருந்து சரிந்தவாறு உயிரிழந்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web