ஆயுள் கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. டி.ஐ.ஜி தனிச்செயலாளர் உட்பட 11 பேர் பணியிடை நீக்கம்!

 
வேலூர் சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்காக சிறை வார்டன்கள் சிவக்குமாரை அழைத்து சென்றனர்.

டிஐஜி ராஜலட்சுமி

அப்போது, ​​வீட்டில் இருந்த பணம், வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றதாகக் கூறி, சிறைக் கண்காணிப்பாளர்கள், காவலர்கள் சிவக்குமாரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவகுமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ஆயுள் கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே வேலூர் சரக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல் சிறைக்கும் மாற்றப்பட்டனர். அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய பரசுராமன், வேலூர் சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

சஸ்பெண்ட்

இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 22ம் தேதி வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், டிஐஜி ராஜலட்சுமியின் தனிச் செயலாளர் ராஜூ, காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி மற்றும் சிறை வார்டன்கள் சுரேஷ், சேது, பெண் காவலர் செல்வி, டிஜிபி ஆகிய 11 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web