நாளை 20 ஓவர் உலக கோப்பை தொடக்கம்!

 
நாளை 20 ஓவர் உலக கோப்பை தொடக்கம்!


ஒவ்வொரு ஆண்டும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 20 ஓவர் உலக கோப்பை போட்டி 6 முறை நடத்தப்பட்டுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2முறையும், இந்தியா , பாகிஸ்தான் , இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் இந்த கோப்பையை வென்றுள்ளன.

நாளை 20 ஓவர் உலக கோப்பை தொடக்கம்!


தற்போது நடைபெற இருக்கும் 7வது 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு இருந்த நிலையில் அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.


இந்தப் போட்டிகள் நாளை அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாட தகுதி வாய்ந்தவை.

நாளை 20 ஓவர் உலக கோப்பை தொடக்கம்!


இலங்கை, வங்க தேசம் உட்பட மற்ற 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடி அதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.இதில் உள்ள 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

நாளை 20 ஓவர் உலக கோப்பை தொடக்கம்!


தொடக்க நாளான நாளை பி பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா அணிகள் மாலை 3.30க்கும் , வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் இரவு 7.30க்கும் என 2 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக். 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இறுதிப்போட்டிகள் நவம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 45 போட்டிகள் மஸ்கட், துபாய், அபுதாபி, ஷார்ஜா நாடுகளில் நடைபெற உள்ளது.

From around the web