தவெக தலைவர் விஜய் வீட்டில் இருந்து நடந்தே சென்று மனோஜ் பாரதிராஜாவுக்கு நேரில் அஞ்சலி!

 
மனோஜ் பாரதிராஜா

 தமிழ் திரையுலகில்  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ்  மாரடைப்பால் காலமானார் . இவருக்கு வயது 48. இவரது திடீர் மரணம்  திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சமீபத்தில் தான்  அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விஜய்

இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.   மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர், இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தியும் வருகிறார்கள்.

ஏற்கனவே, நடிகர் சூர்யா, நடிகர் பிரபு ஆகியோர் நேரில் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்திய நிலையில்  த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது இல்லத்தில் இருந்து நடந்தே சென்று அவருடைய உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.

விஜய்

மேலும், இன்று மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ்  உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. “தாஜ்மஹால்” (1999) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2023ம் ஆண்டு மார்கழித் திங்கள் படம் மூலம் இயக்குனர் ஆனார்  .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web